;
Athirady Tamil News

இந்தியா பாகிஸ்தான் மோதலால் இலங்கைக்கும் நெருக்கடி!

0

இந்தியா – பாகிஸ்தான் மோதல்போக்கு இலங்கையிலும் குறிப்பிடத்தக்க பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.

பாகிஸ்தானின் வான்வெளியை மூட இந்திய அரசு எடுத்த முடிவின் காரணமாக, ஐரோப்பாவிற்குச் செல்லும் விமானங்கள் வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மாற்று வழி

இந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும், என்பதனால் விமான எரிபொருள் செலவுகளை கணிசமாக அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே நிதி சவால்களை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இந்த நிலைமை மற்றொரு கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை மாற்று வழிகள் வழியாக பயணிப்பதால், விமானங்கள் நீண்ட விமான நேரங்கள், அதிக எரிபொருள் செலவுகள் மற்றும் இயக்க அட்டவணைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

கடல்சார் வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி இலங்கையின் கடல்சார் வர்த்தகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலம் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை இழக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தெற்காசியாவில் ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து மையமாக கொழும்பு துறைமுகம் செயல்படுகிறது,

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் போக்கு , கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் அளவு மற்றும் அதனுடன் தொடர்புடைய வருவாய் மட்டங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.