தென்னிலங்கையில் திடீர் துப்பாக்கிச் தாக்குதல் ; சிறுமி ஒருவர் காயம்
கொழும்பு கொஹுவலை, போதியவத்தை பகுதியில் உள்ள சரணங்கர வீதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அருகிலுள்ள வீட்டில் இருந்த 16 வயது சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.