;
Athirady Tamil News

பெயரை மாற்றினாலும் உண்மையை மாற்ற முடியாது – சீனாவிற்கு இந்தியா பதிலடி

0

அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை சீனா மாற்றியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய பகுதிகளின் பெயரை மாற்றும் சீனா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துடன், சீனா தனது எல்லையை பகிர்ந்து வருகிறது.

அருணாச்சல பிரதேசத்தை தனது மாநிலமாக கருதி வரும் சீனா, அவ்வப்போது அங்குள்ள பகுதிகளின் பெயரை மாற்றி, சீனாவின் வரைபடத்துடன் இணைத்து வெளியிட்டு வருகிறது.

அருணாச்சல பிரதேசத்திற்கு ஜாங்னான் என பெயரிட்டுள்ள சீனா, கடந்த 2024 ஆம் ஆண்டு அங்குள்ள பகுதிகளுக்கு பெயரை மாற்றியது.

தற்போது மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளின் பெயரை மாற்றும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.

இந்தியா பதிலடி

சீனாவின் இந்த முயற்சிக்கு, இந்தியா வெளியுறவு துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து வீண் மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் கவனித்துள்ளோம்.

எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, அத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

படைப்பு ரீதியான பெயரிடுதல், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும் என்ற மறுக்க முடியாத உண்மையை மாற்ற முடியாது” என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.