;
Athirady Tamil News

காதலர் என டைப் செய்தால்.. ஸ்மார்ட்போனில் கட்டுப்பாடு விதிக்கும் வடகொரியா

0

வடகொரியா ஸ்மார்ட்போனில் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

வடகொரியா பொதுவாகவே உடுத்தும் உடை தொடங்கி இசை கேட்பது வரை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடைய நாடாக உள்ளது.

வடகொரியாவின் உள்ளே நடப்பது வெளி உலகிற்கு தெரியாது, வெளி உலகில் நடப்பது வடகொரியா மக்களுக்கு தெரியாது என்னும் அளவுக்கு வட கொரியா கடும் தணிக்கை செய்யும் நாடு.

அங்கு டிவியில் கூட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குடும்பம் குறித்த ஆவண படம், பாடல்கள் மட்டுமே 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அங்கிருந்து தப்பி வெளிநாடொன்றில் வாழும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், வடகொரியாவில் இருந்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போன் ஒன்றை ஆய்வு செய்த பிபிசி நிறுவனம், வடகொரியா எந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயனர்களை கட்டுப்படுத்துகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் தணிக்கை
இதன்படி, தென்கொரியாவில் காதலரை குறிக்கும் OPPO என்ற வார்த்தையை வடகொரியாவில் டைப் செய்தால், அதுவாகவே Comrade என மாறிவிடும்.

மேலும், இந்த வார்த்தையை சகோதரர்களிடம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு தோன்றும்.

அதே போல், தென்கொரியா என டைப் செய்தால், அதுவாகவே ‘பொம்மை நாடு’ என்று மாறிவிடும். தென்கொரியாவை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருவதாக நீண்டகாலமாக வடகொரியா குற்றஞ்சாட்டி வருகிறது.

மேலும் ஸ்மார்ட்போன்கள், 5 நிமிடங்களுக்கு ஒருமுறை அதுவாகவே ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அந்த படங்களை, செல்போனில் பயனர்கள் அணுக முடியாத வகையில் ஒரு ரகசிய ஃபைலில் சேமித்து வைக்கப்படுகிறது. அந்த ஸ்கிரீன்ஷாட்களை அதிகாரிகள் பார்வையிட முடியும்.

மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரங்களை வட கொரியா மக்கள் பின்பற்றமால் இருக்க இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா உணவான ஹாட் டாக்(Hot Dog) மற்றும் தென்கொரியா இசையான K-pop, அமெரிக்க பிராண்ட் உடைகள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.