பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை கேலி செய்யும் ரஷ்யா
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரான் அறைந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் ரஷ்ய தரப்பு மேக்ரானை கேலி செய்துள்ளது.
காரணமில்லாமல் மனைவி அடிக்கமாட்டார்
கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov, மேக்ரானின் குடும்ப விவகாரம் ரஷ்யாவுக்கு சம்பந்தமில்லாத விடயம் என்றும், மற்றவர்களுடைய தனிப்பட்ட விடயங்கள் குறித்து விமர்சிப்பது முறையற்ற செயல் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ஒரு மனைவி ஒருபோதும் காரணமில்லாமல் தன் கணவரை அறையமாட்டார் என்றும் கேலி செய்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை அவரது மனைவி அறையும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.