மாவட்டச் செயலகம் மற்றும் வெளிப்புற சூழல், வடிகாலமைப்பு தொடர்பில் ஆய்வு

மாவட்டச் செயலகம் வளாகம் மற்றும் சூழவுள்ள பிரதேசங்களின் வடிகாலமைப்பினை சீர் செய்வது தொடர்பாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.06.2025) பி. ப 2.30 மணிக்கு துறைசார் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இதன் போது மாவட்டச் செயலகம் மற்றும் சூழவுள்ள வீதிகளுடன் இணைந்த வடிகால்களின் நீரோட்டம் போன்ற விடயங்களை ஆய்வு செய்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் கட்டடங்கள் திணைக்கள அதிகாரிகள் பங்குபற்றினார்கள்