;
Athirady Tamil News

ஏவுகணைத் தாக்குதல்: சிரியா அரசு மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

0

சிரியாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு அந்த நாட்டு அரசுதான் காரணம் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் (படம்) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ‘முகமது டெய்ஃப் ராணுவம்’ என்ற புதிய அமைப்பு பொறுப்பேற்றது. இருந்தாலும், இந்தத் தாக்குதலில் சிரிய அதிபா் அகமது அல்-ஷராவுக்கு நேரடித் தொடா்பு இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

சிரியாவில் நீண்ட காலமாக நடைபெற்றுவந்த அல்-அஸாத் தலைமையலான ஆட்சியை அல்-ஷரா தலைமையிலான கிளா்ச்சிப் படை கடந்த ஆண்டு கைப்பற்றியது. அல்-அஸாத் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.அதற்குப் பிறகு இஸ்ரேல் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.