;
Athirady Tamil News

இஸ்ரேல் – ஈரான் போர்ப் பதற்றத்துக்கு இடையே ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்ஸியை பெற்ற டிரம்ப்!

0

கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக இருக்கும் அன்டோனியோ கோஸ்டா ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் அளித்துள்ளார்.

அன்டோனியோ கோஸ்டா போர்ச்சுகலின் முன்னாள் பிரதமராக இருந்துள்ளார். ரொனால்டோ போர்ச்சுகலைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ கையெழுதிட்ட அந்த ஜெர்ஸியில் “அமைதிக்காக விளையாடுகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த டிரம்ப், “ஓ, அமைதிக்காக விளையாடுகிறேன் என்பது எனக்குப் பிடித்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் போர்ப் பதற்றம்
இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளான இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில்தான் டிரம்ப் இந்த ஜெர்ஸியை பெற்று பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் ரொனால்டோ

40 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். 937 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சௌதி லீக்கில் அல்-நசீர் அணிக்காக விளையாடிய அவர் அடுத்த சீசனிலும் அதே அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரொனால்டோ கிளப் உலகக் கோப்பையில் பங்கேற்பாரென பலரும் எதிர்பார்த்த வேளையில் அவர் பங்கேற்கவில்லை. 2026 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் ரொனால்டோ இருக்கிறார்.

இதுவரை போர்ச்சுகல் அணி கால்பந்து உலகக் கோப்பை வெல்லாது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.