பாடசாலை மலசலகூடங்கள் பரிசோதனை- சுகாதாரத் தரநிலை குறித்து ஆராய்வு
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மலசலகூடங்கள் விரிவாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இன்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலும் ஆலோசனையும் ஏற்ப குறித்த சோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப்பரிசோதனையின் போது சுகாதாரத் தரநிலைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மதிப்பீடு செய்வதுடன், சுத்தம், நீர் வசதி, கழிவுநீர் வடிகால் அமைப்பு மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான சூழல் ஆகிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் காணப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான இத்தகைய பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
