பல நாடுகள் ஈரானுக்கு அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளன – ரஷ்யாவின் எச்சரிக்கை

பல நாடுகள் ஈரானுக்கு அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளதாக்க ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுஆயுத திட்டங்களை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, ரஷ்யா ஜனாதிபதி புதினை சந்திக்க கலினிங்ராட் நோக்கி புறப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் (OIC) உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், “ஈரானும் ரஷ்யாவும் நெருங்கிய தோழர்கள். பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனைகள் நடைபெற இருக்கின்றன” என்று கூறினார்.
இந்த தாக்குதல்கள் குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு மன்ற துணைத்தலைவர் மெத்வேதேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ட்ரம்ப் ஒரு புதிய போரைத் தொடங்கிவிட்டார். இது இஸ்ரேலை எப்போதும் அச்சுறுத்தும் நிலைக்கு அழுத்தி விடும்,” என்றும் கூறினார்.
அத்துடன், “பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளன” என்ற எச்சரிக்கையையும் மெத்வேதேவ் வெளியிட்டார். இது பல்வேறு சர்வதேச கவலையை உருவாக்கியுள்ளது.
What have the Americans accomplished with their nighttime strikes on three nuclear sites in Iran?
1. Critical infrastructure of the nuclear fuel cycle appears to have been unaffected or sustained only minor damage.
— Dmitry Medvedev (@MedvedevRussiaE) June 22, 2025
ஈரான் Article 51-ன் கீழ் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கும் உரிமை உண்டு எனவும், “மொழியல்ல, செயலே பதில்” எனவும் அரக்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் அமெரிக்கா போரைத் தூண்டியது என்பதையும், இந்த நடவடிக்கைகள் டிப்ளோமசி துரோகம் என்றும் அவர் கூறியுள்ளார்.