;
Athirady Tamil News

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

 
திருநகர் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார். 
 
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் 
 
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் , கனரக வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.