பூநகரி வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்
பூநகரியில் நேற்றுமுன்தினம்(30) இடம்பெற்ற வான் – மோட்டார்சைக்கிள் விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பிரஸ்தாப நபரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்படும் வழியில் அபாய கட்டத்தை அடைந்தமையால் உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.