தகன இல்லம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட 400 சடலங்கள்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

தகன இல்லம் ஒன்றில் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட சுமார் 400 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் பலர் உரிய விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளனர்.
பாதுகாக்கப்பட்டிருக்கலாம்
மெக்சிகோவின் ஜுவரெஸ் பகுதியிலேயே அந்த தகன இல்லம் அமைந்துள்ளது. இந்த வாரம் விசாரணை அதிகாரிகள் கிட்டத்தட்ட 383 முழுமையான சடலங்களையும் 6 அழுகிய நிலையில் உள்ள பகுதி உடல்களையும் கணக்கெடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தலையிட்டு, உரிய தகவல்களை வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் கார்டெல் வன்முறைக்கு பெயர் பெற்ற மெக்சிகன் நகரம் முழுவதும் உள்ள பல்வேறு இறுதிச் சடங்கு இல்லங்களிலிருந்து உடல்கள் வந்து, அவை எம்பாமிங் செய்யப்பட்டிருக்கலாம் என்று மாகாண விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
கோவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்ததிலிருந்து உடல்கள் பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அந்த தகன இல்லம் நகரின் வெளியே அமைந்துள்ளதால், பல ஆண்டுகளாக என்ன நடந்து வருகிறது என்பது வெளிச்சத்திற்கு வராமல் போயுள்ளது.
17 ஆண்டுகள்
ஆனால் சமீபத்தில் அந்த தகன இல்லத்தில் இருந்து துர்வாடை வருவதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே சம்பவம் அம்பலமானது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் முதலில் அழுகிய நிலையில் உள்ள இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.
ஆனால் எஞ்சிய உடல்கள் அனைத்தும் அந்த வளாகத்தின் இரண்டு கட்டிடங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. தற்போது அந்த தகன இல்லத்தின் உரிமையாளர் மற்றும் ஒரு ஊழியர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிருபணமானால் 17 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.