;
Athirady Tamil News

ஈரான் மோதல் தாக்கம் தொடரும் ; உலக பொருளாதாரத்திற்கு IMF எச்சரிக்கை

0

ஈரான் மீதான மோதல் தற்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.

CNBC ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, மசகு எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு 100 அமெரிக்க டொலருக்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும், உரங்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனால் உணவுப் பொருட்களின் விலையும் 3 முதல் 6 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும், 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

போர் உடனடியாக நிறுத்தப்பட்டாலும் சர்வதேசச் சந்தையைச் சீரமைக்கக் குறைந்தது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என்பதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நாடுகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.