டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா

அமெரிக்காவின் வரி விதிப்பை ஜப்பான் எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்று ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பொருள்களுக்கு அமெரிக்கா 35 சதவீதம் வரை வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமைக்குப்பின் இது அமலாகிறது.
அமெரிக்க வாகனங்கள் மற்றும் அரிசியை ஜப்பான் அதிகளவில் இறக்குமதி செய்ய டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், அமெரிக்க அரசுடன் ஜப்பான் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) பேசிய ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, “இவ்விவகாரத்தில் அமெரிக்காவுடன் எளிதில் உடன்பட்டு விடப் போவதில்லை. ஆகவே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
அமெரிக்காவும் ஜப்பானும் கூட்டாளிகளே. ஆயினும், சொல்ல் வேண்டிய விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டும். உலகின் மிகப்பெரிய முதலீட்டாராக ஜப்பான் திகழ்கிறது. அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்புகளை ஜப்பான் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடு ஜப்பான். அப்படியிருக்கும்போது பிற நாடுகளை கையாளுவது போல ஜப்பானையும் கையாளக் கூடாது” என்றார்.