;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம் ; ஆலய வளாகத்தில் தவறான முடிவெடுத்து நபர்

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கபிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (28.08.2025) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இதையடுத்து சடலத்தை அவதானித்தவர்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டனர்.

சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் உடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

குரவில் உடையார்கட்டு பகுதியை சேர்ந்த கந்தசாமி தர்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.