இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி., ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தம்., அமெரிக்காவின் முரணான நடவடிக்கை
இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்கா-ரஷ்யா இடையே எரிசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிகாரிகள், Sakhalin-1 என்ற ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டத்தில் அமெரிக்க நிறுவனமான Exxon Mobil மீண்டும் சேரும் வாய்ப்பை விவாதித்துள்ளனர்.
2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது, பல சர்வதேச முதலீடுகள் ரஷ்யாவிலிருந்து விலகியதால் Exxon Mobil வெளியேறியது.
தற்போது, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் ஒரு ஊக்கமாக அமையும் என அமெரிக்கா கருதுகிறது.
ஆனால் இதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் இறக்குமதி வரியை நேற்று முதல் (ஆகஸ்ட் 27) அமுல்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் 25 சதவீதமாக இருந்த வரி, இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ரஷ்யா தனது LNG திட்டங்களுக்கு அமெரிக்க உபகரணங்களை வாங்கும் வாய்ப்பு குறித்தும், அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து Nuclear Icebreaker கப்பல்களை வாங்கும் சாத்தியக்கூறுகள் பற்றியும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள், ட்ரம்ப்-புடின் இடையிலான அலாஸ்கா சந்திப்பிற்கு பின்னர் வெள்ளை மாளிகையில் விவாதிக்கப்பட்டதாகவும், ட்ரம்ப் இதய ஒரு வெற்றி என கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.