;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பா. ஜெயகரன் கடமையேற்பு

0

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திரு. பாலசுந்தரம் ஜெயகரன் இன்றைய தினம் (16.07.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையேற்ற பா. ஜெயகரன், முன்னர் உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.