;
Athirady Tamil News

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் திறந்த பிடியாணை

0

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக மீண்டும் பகிரங்க பிடியாணை உத்தரவுகளை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) பிறப்பித்துள்ளது.

பணமோசடி தொடர்பான விசாரணையில் பெயரிடப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து விரைவில் அறிக்கையளிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.