பல இடங்களில் வங்கி அட்டை மோசடி ; பொதுமக்களிடன் உதவி கோரும் பொலிஸார்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கி அட்டை மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக நம்பப்படும், சந்தேகநபரை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
2 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, பொது மகன் ஒருவரால் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் வீசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரண்டு இலட்சம் ரூபா மோசடி
பொலனறுவவையை சேர்ந்த பொதுமகன் ஒருவர், களுத்துறை நகரிலுள்ள வங்கி தானியங்கி பணப்பரிமாற்று இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் போது சந்தேகநபரின் உதவியை நாடியுள்ளார்.
இதன்போதே, சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டையை மாற்றி அதன் மூலம் இரண்டு இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர், தென்னிலங்கையின் பல இடங்களில் இதுபோன்ற வங்கி அட்டை மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.