;
Athirady Tamil News

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்.

0

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்.0719090900 என்ற குறித்த இலக்கத்தினை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய பொது போக்குவரத்தின் போது பொது மக்கள் எதிர்கொள்ளும் அசெளகரியங்கள், இடர்பாடுகளை முறையிடுவதற்காக மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கட்டமைப்பின் கீழ் வடமாகாணத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்றையதினம் பேருந்துகளில் காட்சிப்படுத்தும் பணிகள் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் நடைபெற்ற செயற்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சுப்பிரமணியம்.முரளிதரன் கலந்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.