கலாசாலையில் கல்விக் கண்காட்சி
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிலும் கணித விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கற்பித்தல் உபகரண கண்காட்சி இன்று 23/7/2025 புதன்கிழமை இடம்பெற்றது
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் கலந்து கொண்டார்
தேசியக்கொடி கலாசாலை கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாயின
கற்பித்தலில் கண்காட்சியின் அவசியம் என்ற பொருளில் விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர் இ. செந்தூர்ச்செல்வன் உரையாற்றினார்
விஞ்ஞான நெறி ஆசிரியமாணவி தேவராசா கீற்றா நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார். தி.அ. பெலினி நன்றியுரை ஆற்றினார்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அதிபர் சி. திரிகரன் கலாசாலை முகாமைத்துவ குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.
கண்காட்சியை ஆசிரிய மாணவர்களுடன் அயற் பாடசாலைகளின் மாணவர்களும் பார்த்துப் பயன்பெற்றனர்.




