;
Athirady Tamil News

ATMஇல் பணம் எடுக்க வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன்

0

தலவாக்கலை நகரில் ATM இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையை திருடிச் செல்ல முயன்ற ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனது மருத்துவச் செலவுக்காக பணம் எடுக்க வந்த பெண்ணொருவர் , அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் தனது ATM அட்டையையும், இரகசிய இலக்கத்தையும் கொடுத்து பணத்தை எடுத்துத் தருமாறு கேட்டுள்ளார்.

ATM அட்டை
இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், பணத்தை எடுக்காமல் அட்டையுடன் தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.