6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று யானை உயிரிழந்தது
கண்டலம ஏரி பகுதியில் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த கண்டலமே ஹெடகாரயா யானை நேற்று (13) பிற்பகல் உயிரிழந்துள்ளது.
மனித – யானை மோதலின் விளைவாக இக் காட்டு யானை பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தது.
இதுபோன்றதொரு சந்தர்ப்பத்தில் யானையின் முன்னங்கால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியதன் காரணமாக சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக கண்டலமே ஹெடகாரயா யானை நேற்று உயிரிழந்துள்ளது