தென்னிலங்கையில் நேர்ந்த சோகம் ; கடற்கரையில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் மாயம்
களுத்துறை, பயாகல கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
15 வயதான மாணவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மாணவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.