;
Athirady Tamil News

கணவனின் கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு

0

காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு
அங்குலுகஹ, பிலான பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மனைவியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மனைவியின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.