;
Athirady Tamil News

சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார கடமையேற்பு

0

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் மொனராகலை மாவட்டம் பிபிலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றமாக பெற்று சென்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு செவ்வாய்க்கிழமை (9) புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார கடமையேற்றுக்கொண்டார்.

சம்மாந்துறை பகுதியில் சமூக நலனுக்காக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் புதிய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப் குமார கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.