யாழில். விறகுகளுடன் விறகுகளாக பெறுமதியான மரங்களை கடத்தி சென்றவர் கைது
விறகுக்குள் மறைத்து , பெறுமதியான மரங்களை கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , மரக்குற்றிகளையும் மீட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம்(20) சனிக்கிழமை கைதடி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை வீதியால் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றினை வழிமறித்து சோதனையிட்டனர்
அதன் போது வாகன சாரதி தான் விறகுகளை ஏற்றி செல்வதாக கூறிய போது , பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு , சாரதியை கைது செய்து , வாகனத்துடன் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று வாகனத்த்தினுள் இருந் விறகுகளை கீழே இறக்கி சோதனை செய்ய முற்பட்ட வேளை விறகுகளுடன் விறகுகளாக பெறுமதியான பாலை மற்றும் முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
அதனை அடுத்து சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







