;
Athirady Tamil News

24 வயது மகனை காணவில்லை; தந்தை முறைப்பாடு

0

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து அடம்பன் பகுதிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இளைஞன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 076- 712 1294 மற்றும் 077-0631135 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.