யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்துடன் இணைந்து “தர்மசாஸ்தா குருகுலம்” ஆவணப்பட திரையிடல் மற்றும் நூல் வெளியீட்டு விழாவானது கடந்த திங்கட்கிழமை கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வித்தியானந்தன் நூலகமானது, கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் அனுசரைனயின் கீழ், இலங்கை தமிழியலுக்குரிதான தனித்துவமான மரபுசார் வாழ்வியல் அடையாளங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு அம்சமாக குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கான வரவேற்பு மற்றும் அறிமுக உரையினை யாழ் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட சம்ஸ்கிருத துறைத் தலைவர்
எஸ்.நவநீதகிருஷ்ணன் ஆற்றியதுடன் தலைமை உரையானது யாழ் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதி எஸ். பத்மநாபனால் வழங்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறீசற்குணராசா இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு “தர்மசாஸ்தா குருகுலம்” தொடர்பான ஆவணப்படம் மற்றும் நூலை வெளியிட்டு வைத்ததுடன் அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைப்பீட மாணவர்கள், தர்மசாஸ்தா குருகுல ஸ்தாபகர் அமரர் மஹாதேவக் குருக்களின் குடும்பத்தினர், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.