;
Athirady Tamil News

கையெழுத்தானது காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ; பெரும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின் முழு விவரம்
ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய டிரம்ப், பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் இப்போது தாராளமாகப் கிடைத்து வருகின்றன.

நூற்றுக்கணக்கான லாரிகளில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவிற்குச் செல்கின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள், பிணைக்கைதிகள் குடும்பத்துடன் இணைகிறார்கள்.

ஒரு புதிய மற்றும் அழகான நாள் உதயமாகிறது. மறுநிர்மாண செயல்முறை இப்போது தொடங்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த நிலையை அடைய நீண்ட காலம் ஆனது. நாங்கள் மிகவும் விரிவாக ஆய்வுப்பின் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த இதை சாத்தியமாக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக மத்தியஸ்தர்களாக முக்கியப் பங்காற்றிய எகிப்து மற்றும் கத்தார் அரசாங்கங்களுக்கு அவர் நன்றி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.