;
Athirady Tamil News

இலங்கைக்கு வருகை தந்த பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண்

0

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ராம் சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகிவரும் “பெத்தி” (peddi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் திரிஷா, ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ராம் சரண் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பெத்தி திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ராம் சரண் இலங்கையில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பெத்தி திரைப்படம் 2026ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.