ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களை கொட்டிய குளவிகள்!
ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக வந்திருந்த மாணவர்கள் குழுவொன்று, இன்று (14) மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூட்டை கலைத்தமையால் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குஇதன்போது ளவித் தாக்குதலுக்கு 6 மாணவர்கள் காயமடைந்த நிலையில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.