நடு கடலுக்குள் திடீரென பலியான 09 பிள்ளைகளின் தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்
சுழியோடி மூலம் கடல் அட்டை மற்றும் சங்கு சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 50 வயதுடைய 09 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடலுக்குள் வைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கற்பிட்டி கடற்பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனை
சக கடற்றொழிலாளர்கள் உதவியுடன் இரவோடு இரவாக உயிரிழந்தவரின் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.