;
Athirady Tamil News

9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, மீகாகியுல,பதுளை, கந்தெகெட்டிய, பண்டாரவளை, சொரணாத்தொட்ட, ஹாலி – எல, எல்ல, லுணுகலை, வெலிமடை, ஹப்புத்தளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.