;
Athirady Tamil News

வர்த்தக நிலையங்களில் திடீர் வெடிப்பு ; அவசரமாக வெளியேற்றபட்ட மக்கள்

0

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் புஸல்லாவை நகரில் அமைந்துள்ள 7 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (19) மூடப்பட்டது.

அத்துடன், அங்கிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

7 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயம்
இந்த அபாய நிலை குறித்து புஸல்லாவை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கினர்.

சீரற்ற காலநிலை காரணமாக புஸல்லாவை நகருக்கு அருகிலுள்ள சென்குவாரி தோட்டத்தின் மேல் பகுதியில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, புஸல்லாவை நகருக்குக் கீழே அமைந்துள்ள புஸல்லாவை பல்லேகம பிரிவிலும் நிலத்தில் இவ்வாறான வெடிப்புகள் காணப்படுவதுடன், அந்த இடங்களைச் சீர்செய்யும் பணிகளில் பிரதேச மக்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.