;
Athirady Tamil News

ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த கைதான ஜனாதிபதியின் டிராக் பேன்ட் மாடல்

0

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த நைக்கி பிராண்டின் டெக் ஃப்ளீஸ் வகை டிராக்சூட் தற்போது விறுவிறுப்பான விற்பனையாகி வருகிறது. கடந்த 3 ஆம் தேதியன்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டொனால்ட் ட;ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதில் மதுரோ கண்களில் கருப்புத் துணி கட்டப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் ஒரு சாம்பல் நிற நைக்கி டிராக்சூட் அணிந்திருந்தார்.

Nike Tech Fleece
இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே, அந்த குறிப்பிட்ட வகை Nike Tech Fleece உடைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல ஆன்லைன் தளங்களில் விற்றுத் தீர்ந்தன

மேலும் கூகுளில் “Maduro Nike” மற்றும் “Nike Tech Fleece” போன்ற வார்த்தைகளின் தேடல் பல மடங்கு அதிகரித்தது. நெட்டிசன்கள் இந்த உடையை “மதுரோ ட்ராக் சூட்” என்று கிண்டலாக அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

மதுரோ எப்போதும் அமெரிக்காவையும் அதன் முதலாளித்துவக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். ஆனால், அவர் கைது செய்யப்படும்போது ஒரு பிரபலமான அமெரிக்க பிராண்ட் உடையை அணிந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதன் முழு செட் சுமார் 260 டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 21,000 – ரூ. 25,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பலர் “சிறையில் அடைக்கப்படும்போது கூட இவ்வளவு வசதியான உடையா?” என்று கிண்டலாக மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.