;
Athirady Tamil News

அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

0

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைமை விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

நோர்வூட்டில் சமையல் எரிவாயு இருப்புக்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபைக்கு கிடைத்த கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (25) குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சட்ட நடவடிக்கை
இதன்போது 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றினை ரூ. 4,000க்கு விற்றதாகவும் கூறினார்.

அத்துடன் கடையில் பதுக்கி வைத்திருந்த வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டது.நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளன.

எரிவாயு இருப்புக்கள் கடையில் காட்சிப்படுத்தப்படாமல் வேறொரு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், எரிவாயு இருப்புக்களை காட்சிப்படுத்தி விற்குமாறு விற்பனை பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும். லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கும் நாடு முழுவதும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து நுவரெலிமா மாவட்டத்தில் சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்து இந்த சோதனைக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.