;
Athirady Tamil News

ஈரானில் சந்தைக்குள் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து

0

ஈரானின் மையப்பகுதியான இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள டோர்சே நகரில், இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று பழச்சந்தை ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள், இரண்டு வியாபாரிகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்து குறித்து ஈரானிய அரசு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

இப்பகுதியில் உள்ள பிரதான இராணுவ விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட இந்த ஹெலிக்கொப்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து சந்தைக்குள் விழுந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஹெலிக்கொப்டரை ஓட்டிச் சென்ற கேணல் ஹமெத் சர்வசாத் மற்றும் துணை விமானி மேஜர் முஜ்தபா கியானி ஆகியோர் பலியாகினர்.

அத்துடன், ஹெலிக்கொப்டர் விழுந்து தீப்பிடித்ததில் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.