;
Athirady Tamil News

சாவகச்சேரி தனங்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு: 4 வாகனங்கள் பறிமுதல், இருவர் கைது!

0

யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(09) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிஸார் விரைந்தனர்.

இதன்போது இரு டிப்பர் வாகனங்கள், இரு உழவு இயந்திரங்கள், மண் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார் இருவரை கைது செய்தனர்.

கைதானவர்களையும், சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.