;
Athirady Tamil News

விமான விபத்தில் அஜீத் பவார் பலி!

0

மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் உயிரிழந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், விமானத்தில் பயணித்த 2 விமானிகள், அஜீத் பவாரின் பாதுகாப்பு அதிகாரி, விமான ஊழியர் உள்ளிட்ட அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான புணே மாவட்டம் பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் அஜீத் பவார் புறப்பட்டுள்ளார்.

பாராமதி விமான நிலையத்தில் அஜீத் பவார் சென்ற விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயற்சித்தபோது, நிலைத் தடுமாறி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜீத் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

யார் இந்த அஜீத் பவார்?

மகாராஷ்டிர துணை முதல்வரான அஜீத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார்.

கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக சரத் பவாரைவிட்டு தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்ற அஜீத் பவார், நீதிமன்றத்தை நாடி தேசியவாத காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய தலைவராகவுள்ள அஜீத் பவார், 2010 முதல் 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரையிலும் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.

மாநில அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அஜீத் பவார், முதல்முறையாக பாராமதி மக்களவை உறுப்பினராக 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.