;
Athirady Tamil News

ஆல்பர்ட்டாவில் நீச்சல் குள்ளத்தில் விளையாடிய சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் உடல்நலப் பாதிப்பு

0

கனடா, ஆல்பர்ட்டா மாகாணத்தின் கேன்மோர் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென வாந்தி மற்றும் உடல்நலப் பாதிப்புக்குள்ளான சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.

பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக அவசர உதவிப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முதலுதவி வழங்கியுள்ளனர்.

11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மேலதிக சிகிச்சைக்காக 11 சிறுவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீச்சல் குளத்தின் காற்றோட்டப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இரசாயனப் பொருள் அதிகளவில் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.