;
Athirady Tamil News

திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

0

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் இன்று (02) காலை நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீதியில் கிடந்த நபரை பார்த்த பொது மக்கள் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த திருகோணமலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபர் விபத்தில் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.