;
Athirady Tamil News

போட்டி போட்டு ஓடிய பேருந்துகளால் நேர்ந்த விபரீதம்!

0

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமகடை சந்தியில் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுச் சென்ற இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து சாரதிகளில் ஒருவர் மீது பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், அவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சாரதி கஞ்சா போதைக்கு அடிமையானவர்
இதன்போது சாரதி கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சாரதி களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. கைதான சந்தேகநபர் இன்று (07) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.