;
Athirady Tamil News

கனடாவில் 70 ஆண்டுகளாக இணைந்து வாழும் தம்பதியின் வெற்றி வாழ்வின் ரகசியம்

0

கனடாவில் வாழும் ஒரு தம்பதியர், தங்கள் 70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் வாழ்கிறார்கள் எர்வின் மில்லர் (Erwin Miller) நேவா மில்லர் (Neva Miller) தம்பதியர்.

1955ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள லேக்லாண்ட் கல்லூரியில் படிக்கும்போது, மாணவர்கள் படைசூழ பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர், இளம்பெண்ணான நேவாவின் கண்ணில் பட்டுள்ளார்.

இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க, கண்டதும் காதல் பற்றிக்கொள்ள, இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஓராண்டு ஆனதும் எர்வினுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அப்போதுதான் நேவா செவிலியர் பயிற்சிக்காக படித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

பயிற்சி முடிக்கும்வரை அவரால் திருமணம் செய்துகொள்ளமுடியாது என கல்லூரி விதிகள் கூற, உங்களுக்காக என் படிப்பையே இழக்கத் தயார் என்று கூறியுள்ளார் நேவா.

திருமணமாகி கனடாவில் வந்து குடியமர்ந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் பிறந்துள்ளார்கள்.

எங்கள் அன்பில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை என்று புன்னகையுடன் கூறும் எர்வினின் கன்கள் பாசத்துடன் நேவாவையே பார்த்துக்கொண்டிருக்கின்றன.

எப்படி 70 ஆண்டுகள் இந்த அன்பு நீடித்தது என்று கேட்டால், அதற்கு ஒரு ரகசியம் உள்ளது என்கிறார் எர்வின்.

வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, எதைச் செய்தாலும் நாங்கள் இருவரும் இணைந்தே செய்தோம், அதிர்ஷ்டவசமாக எங்கள் வாழ்வில் கெட்டது அதிகம் நடக்கவில்லை என்கிறார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.