;
Athirady Tamil News

மின் விசிறியால் பறிபோன வங்கி ஊழியர் உயிர்

0

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தாக்கியதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞர் நீர்கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வந்த நிலையில், தொழில் நிமித்தம் அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார்.

நேற்று இரவு தங்கியிருந்த வீட்டில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.