;
Athirady Tamil News

பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; அத்துமீறிய மர்மநபர் யார்?

0

கண்டியில் அமைந்துள்ள பிரபல முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.

பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு
பாடசாலைக்குள் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கபப்ட்ட சிறுமி பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மாணவி மருத்துவரிடம் பரிந்துரைக்கப்பட்டு அறிக்கை பெறப்படும் என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வெளி நபர் ஒருவர் பாடசாலைக்குள் நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர் எங்கிருந்து பாடசாலைக்குள் நுழைந்தார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பாடசாலையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பாதுகாவலர்கள் கடந்த காலங்களில் நீக்கப்பட்டு, புதியவர்கள் குழு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவும் மாணவிகளின் பாதுகாப்பின்மைக்கு பங்களித்துள்ளதாகவும் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.