;
Athirady Tamil News

மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல் ; 59 பேர் பலி

0

மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த புயலுக்கு கெசானி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கெசானி புயலானது கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள மடகாஸ்கரை தாக்கியது.

அங்குள்ள அட்சினானா மாகாணத்தில் உள்ள தமரினா நகர் பகுதியில் கரை கடந்தது. அப்போது பலத்த மழை, சூறாவளிக்காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

புயலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கனமழை, வெள்ளத்திற்கு மொத்தம் 59 பேர் பலியாகி உள்ளனர். 25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 27,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புயலால் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பள்ளியறைகள் முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளன. தோமசினா பகுதி முற்றிலும் உருக்குலைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.