;
Athirady Tamil News

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை வெல்லப்பட்டது ; 62 கோடியை தட்டித்தூக்கிய நபர்

0

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்றைய சீட்டிழுப்பில் வெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பெறுமதிமிக்க பரிசுத் தொகையே வெல்லப்பட்டுள்ளது.

இலங்கை லொத்தர் சபை வெளியிட்ட முடிவுகளின் படி 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாற்றில் தனிநபர் வெற்றிக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.