;
Athirady Tamil News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (20) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.